உலக செய்திகள்

தென்கொரியா அதிபர் மூன் ஜெய்க்கு வடகொரியா அழைப்பு

வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபர் மூன் ஜெய்க்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அழைப்பு விடுத்துள்ளார். #Tamilnews #northkorea

தினத்தந்தி

பியோங்யாங்

தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்கவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிகாரபூர்வ விருந்தில் வடகொரியா அதிகாரிகளுடன் மேசையைப் பகிர்ந்து கொள்ளாமல் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தவிர்த்தார்.

வடகொரியா குழுவின் தலைவரான கிம் யோங்-நாம் அந்த விருந்தில் கலந்துகொண்டார். எனினும், அவர்கள் இருவரும் நேரடியாக பார்த்துக்கொள்வதையும் பேசிக்கொள்வதையும் தவிர்த்தனர் என்று யோன்ஹாப் செய்தி முகமை தெரிவிக்கிறது.

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கிம் யோங்-நாம் உடன் கை குலுக்கியபோது பென்ஸ் அதைத் தவிர்த்துள்ளார். அந்த விருந்து தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே பென்ஸ் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

'குளிர்கால ஒலிம்பிக் தொடங்கும் நாள் அமைதி தொடங்கும் நாளாக நினைவுகூரப்படும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அவ்விருந்தின்போது கூறியுள்ளார். அவர் இன்று, சனிக்கிழமை, வடகொரியா அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதனிடையே மூன் ஜே-இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி கிம் யோ-ஜாங்கை ஒலிம்பிக் தொடக்கவிழாவின்போது நேரில் சந்தித்து கை குலுக்கினார்.

வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபர் மூன் ஜெய்க்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் எழுதிய கடிதத்தை அவரது தங்கை கிம் யோ-ஜாங் தென்கொரிய அதிபரிடம் அளித்துள்ளார். 1953ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக தென்கொரிய அதிபருடன் வடகொரிய அதிபர் சந்திக்க உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு