உலக செய்திகள்

உலக தரத்திலான ராணுவ அதிகாரம் படைத்த நாடு வட கொரியா-கிம் ஜாங் உன் கொக்கரிப்பு

உலக தரம் வாய்ந்த ராணுவ அதிகாரம் படைத்த நாடு வட கொரியா என அதன் தலைவர் கிம் ஜாங் உன் இன்று நடந்த ராணுவ அணிவகுப்பில் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சியோல்,

தென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே பகைமை நிலவி வந்த சூழலில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வடகொரியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.

வட கொரியாவில் இருந்து சென்றுள்ள உயர் மட்ட குழுவில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் இடம்பெற்றுள்ளார். அவர் கிம் வம்சத்தில் இருந்து தென்கொரியா நாட்டிற்கு செல்லும் முதல் நபராவார்.

அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபை அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதித்துள்ளது.

இந்த நிலையில், வட கொரியாவில் ராணுவத்தின் 70வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு அந்நாட்டின் தலைவர் கிம் இன்று ராணுவ அணிவகுப்பினை நடத்தினார். அதன்பின் கிம் 2 சங் சதுக்கத்தில் ராணுவ வீரர்களின் முன் பேசிய கிம், உலக தரத்திலான ராணுவ அதிகாரம் படைத்த நாடு என உலகிற்கு நமது நிலையை எடுத்து காட்டியுள்ளோம் என கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு