உலக செய்திகள்

அணு ஆயுதங்கள் இருப்பதால் வடகொரியா பாதுகாப்பாக உள்ளது: கிம் ஜாங் அன்

இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பியாங்யாங்,

கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67-வது ஆண்டு விழா வடகொரியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந்நாட்டு மக்களை ஆரவாரப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய கிம் ஜாங் அன், வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. வடகொரியாவின் நம்பகமான திறன் மிக்க அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கிம் ஜாங் அன், இனி போர் நடக்காது என்று பேசியிருப்பது சர்வதேச வல்லுநர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்