Image Courtesy: AFP 
உலக செய்திகள்

உக்ரைன் போரில் அணு குண்டு பயன்படுத்த வாய்ப்பா..? - ரஷியா பதில்

உக்ரைன் போரில் அணு குண்டு பயன்படுத்த வாய்ப்புள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

நியூயார்க்,

உக்ரைன் போரில் ரஷியா அணுகுண்டை கையில் எடுக்கக்கூடும் என ஊகங்கள் நிலவி வந்தன. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ரஷியா நிராகரித்துள்ளது. இதுபற்றி ஐ.நா. ஆயுத குறைப்பு ஆணைய கூட்டத்தில், ஐ.நா. சபைக்கான ரஷியாவின் முதல் துணை பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி பேசும்போது கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர், ஊகங்களுக்கு மாறாக ரஷியாவின் அணுசக்தி திறனைப் பயன்படுத்துவது, ரஷியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே, அவற்றுக்கு (அணு ஆயுதங்களால்) பதில் அளிப்பது சாத்தியம் என குறிப்பிட்டார். மேலும் இந்த அளவுகோல்கள், உக்ரைனில் தற்போது வெளிவரும் சூழ்நிலைக்கு எந்த வகையிலும் பொருந்தாது. மேலும் அணுசக்தி போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது. அணுசக்தியை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற கொள்கையை ரஷியா உறுதியுடன் கடைப்பிடிக்கிறது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...