மாஸ்கோ,
உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவு படுத்த புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.