குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச கோர்ட்டு நிறுத்தி வைத்து நேற்று தீர்ப்பு அளித்தது.
ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குல்பூஷண் ஜாதவை குற்றத்தில் இருந்து சர்வதேச கோர்ட்டு விடுவிக்காதது மற்றும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடாததை பாராட்டுகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றங்களை அவர் செய்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யும் என கூறி உள்ளார்.