கெய்ரோ,
ஆப்கானிஸ்தான் நாட்டில் டெய்கண்டி மத்திய மாகாணத்தில் கர்ஜான் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடி ஒன்றை திடீரென வெடிக்க செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எனினும் தலீபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கத்தார் நாட்டின் தோஹா நகரில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தபோதிலும், குண்டுவெடிப்பு தாக்குதல்களும், துப்பாக்கி சூடு தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.