உலக செய்திகள்

பிரேசிலில் தொடா கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலி

வடகிழக்கு பிரேசிலில் தொடா கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30 போ உயிழந்துள்ளனா.

தினத்தந்தி

பிரேசிலியா,

வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் குடியிப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் காரணமாக அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில், வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அச்சம் நிலவி வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்