பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் பல்வேறுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா உள்ளிடோரும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.