Image Courtesy : AFP 
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ரூ.77 கோடி நன்கொடை வழங்கிய டைட்டானிக் ஹீரோ..!

டைட்டானிக் கதாநாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ரூ.77 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

ரஷியாவின் படையெடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் உக்ரைனுக்கு நன்கொடைகள் அளித்து வருகின்றன.

இந்த நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் 'ஜேக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ, உக்ரைனுக்கு ஆதரவாக 10 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 77 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

லியோனார்டோ டிகாப்ரியோவின் தாய்வழி பாட்டியான ஹெலனே இன்டென்பிர்கென் தெற்கு உக்ரைனின் ஒடெசாவில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்