உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 5.9 ரிக்கடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

டோக்கியோ:

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி