டோக்கியோ,
ஜப்பானில் இபராகி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆகப் பதிவாகி உள்ளது.
வடக்கு இபராகியில் 60 கி.மீ (37 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.