உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.

தினத்தந்தி

போர்ட் மோர்ஸ்பை,

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்காக 33 கிமீ தூரத்திலும், நாட்டின் கிழக்கே, 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்