உலக செய்திகள்

பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரான்சில் காந்தியின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

பாரிஸ்,

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலையை நேபாளத்துக்கான இந்திய தூதர் மன்ஜிவ் சிங் பூரி திறந்து வைத்தார். சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பாலஸ்தீனத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்த்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரான்ஸ் நாட்டின் தபால் சேவை நிறுவனமான லா போஸ்டே, மகாத்மா காந்தியின் உருவப்படத்தைக் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.

உஸ்பெகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை