கோப்புப்படம் 
உலக செய்திகள்

மலேசியாவில் மேலும் 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 195 பேர் பலி

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மலேசியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,63,291 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக 195 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,598 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12,297 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 9,50,029 குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,03,664 பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி