கோலாலம்பூர்,
மலேசியா நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுக்கும், ராணிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், ஆனால் நலமாக உள்ளதாகவும், எனினும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
மலேசியாவில் புதிதாக 17 ஆயிரத்து 476 பேர் கொரோனாவுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அங்கு இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.