உலக செய்திகள்

“டிரம்ப் தலையிடாவிட்டால் போர் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” - பாகிஸ்தான் பிரதமர்

டிரம்பின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

தினத்தந்தி

நியூயார்க்,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80-வது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசினார்.

அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிட்டு பேசுகையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்ப் மற்றும், அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு எங்களின் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். உலகில் நமது பகுதியில் (ஆசியாவில்) அமைதியை மேம்படுத்துவதில் ஜனாதிபதி டிரம்பின் அற்புதமான மற்றும் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இது நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச நன்றிக்கடன். டிரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். என்று ஷபாஸ் ஷெரீப் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு பின்புதான் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றும், இதில் மூன்றாம் தரப்பு (டிரம்ப்) தலையீடு இல்லை என்றும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது