உலக செய்திகள்

நோக்கியா மொபைல் போனை விழுங்கிய நபர்;அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்

பிரிஸ்டினா

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் 2000 ம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை விழுங்கியுள்ளார்.இதை தொடர்ந்து அந்த நபர் வயிற்று வலியால் துடித்து உள்ளார்.

அதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவரை டாக்டர் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி எடுத்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 2 மBi நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, டாக்டர் டெல்ஜாகு தனது பேஸ்புக்கில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் இருந்தபோது எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.