Image Courtesy: AFP 
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றினாலும் உக்ரைன் வீரர்கள் அங்கு தான் உள்ளனர் - ஜெலென்ஸ்கி

உக்ரைன் படையினர் சரண் அடைய ரஷியா விதித்த ‘கெடு’ முடிந்த நிலையில், உருக்காலையில் தஞ்சம் புகுந்தோர் கதி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கீவ்,

உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

ஏப்ரல் 21, 11.51 p.m

நாங்கள் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்களை அமெரிக்காவிற்கு வரவேற்றுள்ளோம். இன்று, "உக்ரைனுக்கான ஐக்கியம்" என்ற புதிய திட்டத்தை நான் அறிவிக்கிறேன், அடைக்கலம் தேடும் உக்ரேனியர்கள் ஐரோப்பாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு வருவதற்கு இது உதவும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21, 11.05 p.m

மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், போர்க்களத்தில் உக்ரேனிய எதிர்ப்பின் கடைசி நிலையை தாக்க வேண்டாம் என்று தனது ராணுவத்துக்கு கட்டளையிட்டபோதும், மூலோபாய துறைமுகமான மரியுபோலில் வெற்றி பெற்றதாக கூறினார்.

ஏப்ரல் 21, 10.44 p.m

கனரக பீரங்கிகள் மற்றும் உக்ரைனுக்கான பிற ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21, 8.00 P.M

மரியுபோல் நகரை ரஷியா கைப்பற்றினாலும் உக்ரைன் வீரர்கள் அங்கு தான் உள்ளனர் - ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மரியுபோல் துறைமுக நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யா கட்டுப்படுத்தினாலும் உக்ரைன் படைகள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

ஏப்ரல் 21, 7.00 P.M

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் வழங்கிய அமெரிக்கா...!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கான இராணுவ உதவியாக $800 மில்லியன் என்ற புதிய தொகுப்பை அறிவித்துள்ளார், இது டான்பாஸ் பகுதியில் ரஷிய படைகளுக்கு எதிரான போரில் கெய்வின் படைகளுக்கு உதவும் என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 21, 6.00 P.M

உக்ரைனில் தோல்வியை தொடரும் ரஷியா - அமெரிக்கா கிண்டல்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் ரஷியா தனது இலக்குகளை அடையவில்லை என்றும், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளே அதற்குக் காரணம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21, 5.00 P.M

உக்ரைனில் பிடிபட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கிய ரஷிய வீரர்கள்

உக்ரைனில் பிடிபட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21, 4.00 P.M

மரியுபோல் நகரை ரஷிய படையினர் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து சில பொதுமக்கள் வெளியேறி உள்ளனர். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு பொதுமக்களுடன் 4 பஸ்கள் மட்டுமே மரியுபோலில் இருந்து தப்பிக்க முடிந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு இன்னும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஏப்ரல் 21, 3.00 P.M

ரஷிய வீரர்களுக்கு புதின் பாராட்டு

ரஷியா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷிய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷிய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு ராணுவத்தினருக்கு புதின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.

ஏப்ரல் 21, 2.00 P.M

மரியுபோலில் மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் - ரஷியாவிடம் உக்ரைன் கோரிக்கை

உக்ரைனின் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டாலை விட்டு பொதுமக்களும் காயம் அடைந்தவர்களும் வெளியேற மனிதாபிமான பாதை அமைக்க வேண்டும் என்று ரஷியாவிடம் உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தனது படைகளிடம் அசோவ்ஸ்டல் ஆலையைத் தாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், அங்குள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளே வைத்து ஆலையின் கதவுகளுக்கு சீலிடுமாறு புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.

"சுமார் 1,000 பொதுமக்கள் மற்றும் 500 காயமடைந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று அசோவ்ஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெரேஷ்சுக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21, 10.00 am

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள நிலையில் எதிரிகள் ஒருமுறைக்கு இரு முறை யோசிக்கும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21, 06.00 a.m

ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரஷியா மற்றும் உக்ரைனின் நிரந்தர தூதரகங்களுக்கு நேற்று பிற்பகல் தனித்தனி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறினார். மேலும் , விளாடிமிர் புதினை வரவேற்கும்படி, வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டதாக அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏப்ரல் 21, 05.45 a.m

அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. தலைவர் குட்டரெஸ், ரஷியா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அண்டை நாட்டில் ரஷியாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ரஷிய மற்றும் உக்ரைன் தலைவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21, 05.05 a.m

ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

இந்த தடைகள் டிரான்ஸ்கேப்பிடல் பேங்க்( Transkapitalbank), அனுமதிக்கப்பட்ட ரஷிய தொழிலதிபர் கான்ஸ்டாண்டின் மேலோஃப்யேவ் உடன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ-சுரங்க நிறுவனங்களில் ஒன்றான ரஷியாவிற்கு சொந்தமான பிட்ரிவர் ஏஜி (Bitriver AG) ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களை குறிவைத்து இந்த தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21, 04.22 a.m

அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவியுடன் ஐந்து விமானங்களை அனுப்பியது, மேலும் ஆயுதங்களை வழங்க உள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், கடந்த சில நாட்களுக்குள் சில விமானங்கள் அனுபப்பட்டுள்ளன. மேலும் அதிகமான விமானங்கள் ராணுவ உபகரணங்களை சுமந்து செல்லக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 03.10 a.m

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் 80% பகுதி ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

மேலும் 18,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரமான கிரெமின்னாவை ஏப்ரல் 18 அன்று கைப்பற்றிய பின்னர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அதிகரித்ததாக லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் செர்ஹி கெய்டாய் கூறினார்.

ஏப்ரல் 21, 02.52 a.m

உக்ரைனுக்கு அதிகமான விமானங்கள் வழங்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறியதைத் திரும்பப் பெற்றது. ரஷியாவிற்கு எதிரான போரில் அதிக ஜெட் விமானங்களை கீவ் பயன்படுத்த உதவும் வகையில் பாகங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21, 02.12 a.m

உக்ரைனின் பேச்சுவார்த்தையாளர்கள் மரியுபோலில் இருந்து ரஷிய ராணுவத்தை வெளியேற்றும் பேச்சுவார்த்தைக்கு வருகை தர தயாராக உள்ளனர்.

உக்ரைனின் அமைதிப் பேச்சுக் குழுவின் இரண்டு உயர்மட்ட உறுப்பினர்களான மைக்கைலோ பொடோலியாக் மற்றும் டேவிட் அரகாமியா ஆகியோர், மரியுபோலில் சிக்கியுள்ள உக்ரேனிய இராணுவத்தை, பொதுமக்களைக் காப்பாற்ற "ஒரு சிறப்புச் சுற்று பேச்சுவார்த்தைக்கு" செல்வதாகக் கூறினர்.

ஏப்ரல் 21, 01.17 a.m

ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோலில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறவில்லை என்று கீவ் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21, 12.36 a.m

உக்ரைன் படையினர் சரண் அடைய ரஷியா விதித்த கெடு முடிந்தது: உருக்காலையில் தஞ்சம் புகுந்தோர் கதி என்ன?

மரியுபோல் நகரில் உக்ரைன் படையினர் சரண் அடைய ரஷியா விடுத்த கெடு முடிந்தது. அவர்கள் சரண் அடையாத நிலையில், அங்குள்ள உருக்காலையில் தஞ்சம் அடைந்தோர் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் கண்ணுக்கெட்டிய தொலைவில் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போர் தொடர்புடைய இரு நாடுகளையும் தாண்டி உலகளாவிய பொருளாதார பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், உக்ரைன்போர் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

இந்தப்போரினால் உக்ரைன் மக்கள் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏற்கனவே அகதிகளாக அந்த நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளுக்கு சென்றிருப்போர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்களில் 28 லட்சம் பேர் அண்டை நாடான போலந்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ரஷியா மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன. இந்த நிலையில், வெளியுறவு கொள்கையில் தடைகள் மற்றும் பொருளாதார தடைகள் என்ற வீணான கொள்கையை அமெரிக்க கை விட வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் ஒரே இரவில் உக்ரைனின் 106 பீரங்கி துப்பாக்கிச்சூடு நிலைகள் உள்பட 1,053 ராணுவ கட்டமைப்புகளை தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

மிக துல்லியமாக தாக்குகிற ஏவுகணை தாக்குதலில் 40 உக்ரைனிய படை வீரர்கள் கொல்லப்பட்டனர், 7 ராணுவ தளவாட பிரிவுகளை அழித்ததாகவும் ரஷியா கூறி உள்ளது.

இதற்கிடையே ரஷியா தனது ராணுவ பலத்தை உக்ரைன் நகரங்களுக்கு எதிராக அதிகரித்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த பிராந்தியத்தை ரஷியா கைப்பற்றினால் சுரங்கங்கள், உலோக தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறை சொத்துக்கள் உக்ரைனிடம் இருந்து பறிக்கப்பட்டு விடும்.

டான்பாசில் ரஷியா 20 ஆயிரம் வெளிநாட்டு தருப்புகளை கொண்டிருப்பதாக ஐரோப்பிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் கூலிப்படையினர் மற்றும் சிரியா, லிபியாவை சேர்ந்த பதிலி போராளிகள் என்றும் அவர் கூறினார்.

கார்கிவ் மற்றும் ரெயில் நிலைய தாக்குதலுக்கு ஆளான கிராமடோர்ஸ்க் நகரம் மீது கொடிய தாக்குதலை ரஷியா நடத்தி உள்ளது. டான்பாஸ் பிராந்தியத்துக்கு மேற்கே சபோரிஜியா மற்றும் டினிப்ரோவை சுற்றிலும் உள்ள பகுதிகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், கணக்கிலடங்கா ராணுவ தளங்களை, ஆயுதக்கிடங்குகளை ரஷிய படைகள் குண்டுவீசி அழித்துள்ளன என தெரிவித்தார்.

ரஷிய ராணுவம் தன்னிடம் உள்ள அனைத்தையும் போரில் பயன்டுத்துகிறது. அதன் பெரும்பாலான படைகள் இப்போது உக்ரைனிலும், ரஷிய எல்லையிலும் குவிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி கூறினார். இந்தப் போரில் ரஷிய ராணுவம், உலக வரலாற்றில் தன்னை மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற ராணுவமாக எழுதிக்கொண்டிருக்கிறது என்றும் சாடினார்.

மரியுபோல் நகரத்தை வசப்படுத்தி விட ரஷியா துடிக்கிறது. அங்கு 10 சதுர கி.மீ. பரப்பிலான அஜோவ் உருக்காலையில் உக்ரைன் படையினர் தங்கி உள்ளனர். அந்த ஆலையை தரை மட்டமாக்க ரஷிய படைகள் கனரக குண்டுகளை வீசியதாக கூறுகின்றன. அத்துடன் அங்கு நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த ஆஸ்பத்திரி மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

மரியுபோல் உருக்காலையில் உள்ள உக்ரைன் படையினர் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைவதற்கு நேற்று கிரீன்விச் நேரப்படி 11 மணி வரை (இந்திய நேரப்படிநேற்று மாலை 4.30 மணி) ரஷியா கெடு விதித்தது. ஆனால் உக்ரைன் அடிபணியவில்லை. சரண் அடைய மாட்டோம் என்று உக்ரைன் கடற்படை தளபதி செர்ஹி வோலினா கூறினார். அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், காயம் அடைந்த 500 வீரர்கள், பெண்கள், குழந்தைகள் எங்களோடு உள்ளனர், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கெடு முடிந்த நிலையில் ரஷியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாகும், உருக்காலையில் தஞ்சம் அடைந்துள்ள அப்பாவி மக்கள் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள சுரங்கப்பாதைகள், பட்டறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது.

மரியுபோல் நகரில் 1 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மருந்துகள், வெப்பமூட்டும் கருவிகள் இன்றி தவிக்கின்றனர். இந்த நகரை தரை மட்டமாக்க வேண்டும் என்று ரஷியா துடிக்கிறது என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.

மரியுபோல் நகரை ரஷியா பிடித்து விட்டால் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பரந்த நிலப்பரப்பு, அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும், அதற்கான வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்