உலக செய்திகள்

மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் தள்ள வேண்டும்; அமெரிக்க எம்.பி. சொல்கிறார்

‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் தள்ள வேண்டும் என அமெரிக்க எம்.பி. ரான் வைடன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் பேஸ்புக்கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை சிறையில் தள்ள வேண்டும் என அமெரிக்க எம்.பி. ரான் வைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பேஸ்புக் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து, மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்க மக்களிடம் மீண்டும், மீண்டும் பொய் கூறி வருகிறார். அவர் ஏராளமான மக்களை காயப்படுத்தி இருக்கிறார். இதற்கு அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் இது தொடராமல் இருக்க வெறும் அபராதத்தோடு நிறுத்தாமல், மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்