உலக செய்திகள்

சீனாவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - தியான்மென் சதுக்கத்தில் அதிபர் ஜி ஜின்பிங் அஞ்சலி

பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் மலர் அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டர்ம்பர் 30-ந் தேதியன்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சீனாவில் இன்று நாடு முழுவதும் தியாகிகள் மற்றும் மறைந்த தேசிய வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும், இன்று பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பெய்ஜிங் மட்டுமல்லாது சீனாவின் அனைத்து நகரங்களிலும் உள்ள நினைவு மண்டபங்கள், வரலாற்றுத் தளங்கள் மற்றும் தியாகிகளின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு