லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில், நவாஸ் ஷெரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவருமான மர்யம் நவாசை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை முகமை (NAB) கைது செய்துள்ளது.
லோக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பை காணச்செல்லும் போது, மர்யம் நவாசை கைது செய்த என்.ஏ.பி அதிகாரிகள் லாகூர் கொண்டு சென்றனர்.