உலக செய்திகள்

பயங்கரவாத முகாம் மீது நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை மசூத் அசார் உறுதி செய்தார்

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

இந்திய விமானப்படை விமானங்கள் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

இதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்இமுகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது. அதேநேரம் இந்திய விமானப்படை வெற்றிகரமாக அரங்கேற்றிய இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மாறுபட்ட தகவல்களை வெளியிட்டது.

எனினும் இந்திய விமானப்படையின் இந்த குண்டுவீச்சை மசூத் அசார் உறுதி செய்துள்ளார். பாலகோட் பயங்கரவாத முகாம் மீது நடந்த தாக்குதலை உறுதி செய்துள்ள அவர், ஆனால் இந்த தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்களோ, பிற பயங்கரவாதிகளோ கொல்லப்படவில்லை என கூறியதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை