உலக செய்திகள்

ஹாங்காங்கில் சீன அதிபருக்கு ராணுவ வரவேற்பு

ஹாங்காங்கிற்கு சென்ற டாங்கிகள், ஏவுகணை செலுத்து வாகனங்கள் உட்பட சீன ராணுவத்தின் பிராம்மாண்ட வரவேற்பு அதிபர் ஸீ க்கு கொடுக்கப்பட்டது.

ஹாங்காங்

ஸீ ஜின்பிங்கின் வரவேற்பிற்கு முன்னதாக அதிபரின் வருகையை ஒட்டி அரசியல் கைதிகள் பலரை காவல்துறையினர் விடுதலை செய்தனர். இவர்கள் அதிபரின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

ஸீ ஹாங்காங்கிற்கு வந்துள்ளது அத்தீவு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் கையளிக்கப்பட்டது. எனினும் ஹாங்காங்கில் முழுமையாக சீன அரசிற்கு ஆதரவில்லை. அங்கு ஜனநாயக உரிமை கோரி பெரியளவிலான போராட்டங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன.

சீன அதிபரின் வருகையை ஒட்டி ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் நகரின் பல பகுதிகள் இயல்பு வாழ்க்கை தடை பெற்றிருந்தது.

ஹாங்காங்கின் வடக்கு மூலையிலுள்ள சீன ராணுவத்தின் விமானநிலையத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவ அணிவகுப்பை கடந்த சென்ற போது அதிபர் ஹலோ காம்ரேட்ஸ்! (தோழர்களே) என்று கூற படை வீரர்கள் பதிலுக்கு ஹலோ சேர்மன்! (தலைவரே) என்று கூறினர்.

பொதுமக்களுக்கு தொப்பி, தண்ணீர் பாட்டிலகள், நொறுக்குத்தீனி ஆகியன வழங்கப்பட்டிருந்தன.

ஹாங்காங் சீனாவோடு இணைந்தாலும் ஒரு நாடு, இரு அமைப்பு எனும் ஒப்பந்தப்படி அங்கு ஜனநாயக உரிமைகள், நீதிமன்றம் ஆகியன உண்டு. 2014 ஆம் ஆண்டு முழுமையான ஜனநாயகம் வழங்கக்கோரி பெரும் போராட்டம் நடைபெற்றது. ஹாங்காங்கில் தேர்தலும் உண்டு. என்றாலும் சீன அரசு தனது பிரதிநிதிகளை பேரவைக்கு நியமிக்கும்.

இதனிடையே அமெரிக்க ஹாங்காங்கில் குடிமக்கள் உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை தடையின்றி அனுமதிக்கும்படி கோரியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு