உலக செய்திகள்

குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு: உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது தான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஐரோப்பிய பிராந்தியம்தான் அதிகபட்ச பாதிப்பாக 46 சதவீத பங்களிப்பை (13 லட்சம் பேர்) கொண்டுள்ளது.கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவதும் 21 ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை பதிவு செய்வதில் மாறாமல் இருப்பதாவும் அது தெரிவிக்கிறது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்