சிங்கப்பூர்,
சிங்கப்பூர் நாட்டின் செராங்கொன் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்கு நேற்று பார்சல் வந்தது
அந்த பார்சலில் பன்றி இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மத வழிபாட்டு தலத்தில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், மசூதிக்கு பார்சலில் பன்றி இறைச்சி அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.