உலக செய்திகள்

மெர்க்கலுடனான திருமணத்தை உடனே நிறுத்துங்கள் இளவரசர் ஹாரிக்கு சகோதரர் கடிதம்

மெர்க்கலுடனான திருமணத்தை உடனே நிறுத்துங்கள் என அவரது சகோதரர் இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தினத்தந்தி

திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள் என இளவரசர் ஹாரிக்கு மெர்க்கலின் சகோதரர் தாமஸ் பென்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மெர்க்கல் பற்றி எழுதியுள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவரான மெர்க்கல் இளவரசர் ஹாரியை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியான நாளில் இருந்து, மெர்க்கலின் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகமாக, மெர்க்கல் பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். மே 19 ஆம் திகதி ஹாரி - மெர்க்கல் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடந்துவருகின்ற நிலையில், மெர்க்கலின் சகோரர் தாமஸ், இளவரசர் ஹாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மெர்க்கல் வாழ்க்கையில் ஆழமில்லாத பெண் ஆவாள். மேலும் அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மெர்க்கலின் சுயரூபதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், இங்கிலாந்து ராயல் திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு ஆகும் என எழுதியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு