உலக செய்திகள்

டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் அணிந்த ஆடையால் சர்ச்சை

டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் அணிந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #MelaniaTrump

வாஷிங்டன்

மெலனியா டிரம்ப் அமெரிக்க-மெக்சிகோ எல்லையிலுள்ள அகதிகள் சிறார் குடியிருப்பாளர்களைப் பார்வையிட சென்றார். ஆனால் அவரது அந்த பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் அணிந்து வந்த ஜாக்கெட்டில் "நான் உண்மையில் கவலைப்படுவதில்லை, நீங்கள்:" என குறிப்பிட்டு இருந்தது. இதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து மெலனியா செய்தி தொடர்பாளர் கூறுகையில் இதற்கு உள்ளர்த்தம் எதுவும் இல்லை என கூறி உள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் இது ஊடகங்களின் பொய்யான முகங்களை காட்டுகிறது என குறிப்பிட்டு உள்ளார்.