உலக செய்திகள்

ஹிலாரி கிளிண்டனின் உடல் நிலையை அறியவே ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தேன் - டிரம்ப் ஜூனியர்

ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் கிளிண்டனின் உடல் நிலையை அறியவே ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தேன் என்றார் அதிபர் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப்.

வாஷிங்டன்

கிளிண்டன் எவ்வாறு உடல் தகுதி, குணாதிசயம் அல்லது மனதளவிலான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்பதை அறியவே தான் ஆர்வம் கொண்டிருந்ததாக செனட் நீதி விசாரணை கமிட்டியிடம் 5 மணிநேரம் நீடித்த விசாரணையின்போது ஜூனியர் டிரம்ப் கூறினார். ரஷ்ய வழக்கறிஞரிடம் டிரம்ப் டவர் கட்டடத்தில் ஜூன் 9 ஆம் தேதி சந்தித்த போது பேசியவற்றை விரிவாக எடுத்துக் கூறினார் டிரம்ப் ஜூனியர்.

நான் கிளிண்டனின் உடல் நலம் பற்றி அறிவது குறைந்தபட்ச தேவையுடையது என்று நான் கருதினேன் என்றார் அவர்.

அது போன்ற செய்திகளை கொண்டு மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஏதேனும் செய்ய இயலுமா என்று நான் சிந்தித்து வந்தேன். அப்போது ரஷ்யர்கள் வேவு பார்த்து வந்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் தெரியாது என்றார் டிரம்ப்.

விசாரணை அதிகாரிகள் பலர் டிரம்பின் பதில்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கின்றன என்றனர். டிரம்பின் வாக்குமூலத்தில் விட்டுப்போன பல அம்சங்கள் இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் வேட்பாளர் டிரம்ப் ஹிலாரி கிளிண்டன் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் இந்த சந்திப்புக்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து அதில் எதுவுமில்லை என்று மூத்த உறுப்பினரான ஷிஃப் கூறினார்.

ஜூனியர் டிரம்ப் முன்பு ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது தத்து எடுப்பது குறித்து விவாதிக்க என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது என்றும் அவர் கூறினார்.