* ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல் சர்கா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தியாலாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
* லண்டனில் ஊரடங்கை கண்டித்து ஹைதி பூங்காவில் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் போராட்டம் நடத்திய 19 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
* கொரோனா தடுப்பில் டிரம்பின் செயல்பாடுகளை தொடர்ந்து குறை கூறிவரும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தற்போது நேரடியாக அவரை கண்டித்துள்ளார். பெரும்பாலான தலைவர்களும், அதிகாரிகளும் தாங்கள் ஒரு பொறுப்பில் இருப்பதை உணரவில்லை. பொறுப்பேற்பது போல் நடிப்பது கூட இல்லை என்று அவர் டிரம்பை சாடியுள்ளார்.
* சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட புரோகிரஸ் எம்.எஸ்.-13 சரக்கு விண்கலம் அங்கு தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து, ஜூலை மாதம் திரும்பும் என்று நாசா அறிவித்துள்ளது.