உலக செய்திகள்

ரஷியாவில் ராணுவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்து

ரஷியாவில் ராணுவ போர் விமானம் ஒன்று தீப்பிடித்து குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்துக்கு முன், விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பி விட்டார்.

இதனை தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றி பரவியுள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் அனைத்து தளங்களையும் சேர்த்து 45 குடியிருப்புகள் வரை சேதமடைந்து உள்ளன.

சுகோய் சூ-34 ரக ஜெட் விமானத்தின் என்ஜின் ஒன்றில் திடீரென தீப்பிடித்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் அதிபர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், சுகாதார மற்றும் அவசரகால சேவைக்கான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கவர்னரை சம்பவ பகுதிக்கு செல்லும்படி உத்தரவிட்டார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்