கொழும்பு,
பதற்றமான சூழல் நிலவுவதால் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
அதிபருக்கு எதிராக அலரி மாளிகை முற்றுகை, கொழும்புவின் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம், பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் நடத்திய தாக்குதல் என உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. பிரதமர் மாளிகைக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் இலங்கை கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர், ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வரை வன்முறை தூண்டப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதனால், வன்முறை சம்பவத்தை தடுக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.