உலக செய்திகள்

கஜகஸ்தானில் விபத்தில் சிக்கிய ராணுவ போக்குவரத்து விமானம்; 4 பேர் உயிரிழப்பு

கஜகஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அல்மேட்டி,

கஜகஸ்தான் நாட்டில் ஆன்-26 ரக ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று நூர்-சுல்தான்-அல்மேட்டி வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபொழுது, ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இதன்பின்னர் அவசரமாக தரையிறங்கி உள்ளது.

அந்த விமானம், தெற்கே அல்மேட்டி நகரில் உள்ள அல்மேட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தரையிறங்கியபொழுது திடீரென தீப்பிடித்து கொண்டது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டு அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்