உலக செய்திகள்

வெறுப்புணர்வு, வன்முறையே உலக அமைதிக்கு பெரும் சவால்: பிரதமர் மோடி பேச்சு

வெறுப்புணர்வு, வன்முறையே உலக அமைதிக்கு பெரும் சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பேசினார்.

தினத்தந்தி

கொழும்பு,

வெறுப்புணர்வு, வன்முறையில் ஊறிய மனநிலையே உலக அமைதிக்கு பெரும் சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இலங்கையில் வெசாக் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், இருநாடுகளுக்கு இடையேயான சண்டையைவிட வெறுப்புணர்வு, வன்முறையில் ஊறிய மனநிலையே நீடித்த உலக அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

புத்தரின் தத்துவங்கள் நல்லாட்சிக்கு பல்வேறு வழிவகைகள் வகுத்துத் தந்துள்ளன. அதிர்ஷ்டவசமா இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுமே புத்தரின் தத்துவங்களால் பயனடையும் ஒரே பிராந்தியத்தில் அமைந்துள்ளன. 2.5 மில்லியனுக்கு முன்னால் உள்ள புத்தரின் தத்துவங்கள் 21 வது நூற்றாண்டுக்கும் பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது