உலக செய்திகள்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் புகலிடங்கள் எதுவும் இல்லை: பாதுகாப்பு மந்திரி பேட்டி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் புகலிடங்கள் மற்றும் ஹக்கானி நெட்வொர்க் எதுவும் இல்லை என அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வலியுறுத்தி கூறியுள்ளார். #PakistanDefenceMinister

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஹக்கானி நெட்வொர்க் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன என்றும் தீவிரவாதிகளின் புகலிடங்கள் செயல்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நாட்டில் இருந்து தீவிரவாதத்தினை ஒழிப்பதில் முக்கிய பங்கை பாகிஸ்தான் செயலாற்றி வருகிறது.

நாட்டில் தீவிரவாதிகளுக்கான புகலிடங்கள் எதுவும் இல்லை என்று கூறினார். ஆப்கானிஸ்தான் அமைதியான, நிலை தன்மை கொண்ட மற்றும் ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் விருப்பம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.