உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதியில் நிலநடுக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை பகுதிக்கு இடையே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்கு எல்லை மற்றும் இந்தியாவுக்கு இடையே 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று அபோதாபாத், நாகியால் மற்றும் மன்ஷெரா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். எனினும், காயமடைந்தோர் அல்லது பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

கடந்த மே மாதத்தில், சித்ரால் மற்றும் கைபர் பக்துன்குவா பகுதியை சுற்றியுள்ள இடங்களில் 4.2 அளவிலான நிலநடுக்கமும், கடந்த வருடம் ஏப்ரலில், கைபர் பக்துன்குவாவில் உள்ள பல நகரங்களும் 5.2 அளவிலான நிலநடுக்கத்திற்கு இலக்காகின.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு