லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு மோடி தனது வாழ்த்துகளை கூறினார். மேலும் இருநாடுகளின் உறவை பலப்படுத்துவதற்கும், வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தினர். அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டிற்கு தங்கள் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இரு தலைவர்களும் தீர்மானித்தனர். என்று தெரிவிக்கப்படுள்ளது.