உலக செய்திகள்

எல்லையில் பதற்றம் இருந்தாலும் மோடி, ஸீ ஜெர்மனியில் சந்திக்க வாய்ப்பு?

இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவினாலும் மோடியும், ஸீ ஜின்பிங்கும் ஜி-20 மாநாட்டில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

டெல் அவிவ்

மோடி தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார். பின்னர் ஜெர்மனி செல்லும் அவர் ஹாம்பர்க் நகரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அப்போது சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் மோடி பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். ஜி-20 மாநாட்டின் போது பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க இணைந்து உருவாக்கியுள்ள பிரிக்ஸ் அமைப்பின் கூட்டமும் நடைபெறவுள்ளது. ஜூலை 7 ஆம் தேதியன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஸீயும், மோடியும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸீ தற்போது ரஷ்யா சென்றுள்ளார், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா முயற்சிகளை எடுத்து வருவதாக ராஜதந்திர வட்டாரங்களை சுட்டிக்காட்டி பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்திய, பூட்டான் மற்றும் சீனா இம்மூன்று நாடுகளும் இணையும் முனையத்தில் சீனா சாலை அமைக்க முயற்சிக்க இதர இரு நாடுகளும் கடுமையாக ஆட்சேபித்து வருகின்றன. இது தொடர்பாக சீனா, இந்தியாவிற்கு இடையில் கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கவுள்ளது சூழலை தணிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்