உலக செய்திகள்

ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியாவின் டெகஸ்டான் நகரில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் கடந்த 7ம் தேதி ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.

கடற்கரை அருகே உள்ள நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் இரண்டு துண்டாகி கடல் அருகில் உள்ள நிலப்பரப்பில் விழுந்தது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறி அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு