உலக செய்திகள்

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும்: தென்கொரியா விருப்பம்

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

சியோல்,

வடகொரியாவுடன் மீண்டும் பொருளாதார ஒத்துழைப்பை துவங்க அந்நாடு மீதான பொருளாதார தடையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இது குறித்து கூறியிருப்பதாவது:-

அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை வட கொரியா இன்னும் உறுதியாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும்.

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால்தான், அந்த நாட்டுடன் தென் கொரியா வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும்.எனவே, அந்தப் பொருளாதாரத் தடைகளை விலக்குவது குறித்து அமெரிக்காவிடம் பேசுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு