உலக செய்திகள்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 41,26,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,80,986 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த எட்டு நாட்களில் அந்நாட்டில் புதிதாக 80,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,09,688 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 34,306 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை