உலக செய்திகள்

சோமாலியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

மொகடிசு,

சோமாலிய நாட்டின் தலைநகர் மொகடிசுவில் இன்று காலை நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 20 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு முன்னாள் கட்டுப்பாட்டு சோதனைச் சாவடியில் நடந்து உள்ளது.

இதில் குறைந்தது 90 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

1991ல் இருந்து சோமாலியா நாடு வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் தீவிரவாதம் இயக்கம் நடத்திய கார் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் தலைநகர் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது.

அல்-ஷபாப் 2011ல் சோமாலிய தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களின் சில பகுதிகளை இன்னும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. அல்-ஷபாப் அண்டை நாடான கென்யாவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் தங்கி இருந்த ஓட்டலை முற்றுகையிட்டு 5 பேரை அல்-ஷபாப் கொன்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...