image courtesy: AFP 
உலக செய்திகள்

ஈசி ஜெட் நிறுவனத்தின் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து..?

ஈசி ஜெட் நிறுவனம் அடுத்த 10 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

More than 200 EasyJet flights canceled?

ஈசி ஜெட் நிறுவனத்தின் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து..?

ஈசி ஜெட் நிறுவனம் அடுத்த 10 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Easy jet company, flights canceled, ஈசி ஜெட் நிறுவனம், விமானங்கள் ரத்துலண்டன்,

ஈசி ஜெட் நிறுவனம் சாஃப்ட்வேர் கோளாறு காரணமாக அடுத்த 10 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயணம் மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

லண்டனில் அடுத்த வாரத்தில் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராணி எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்திற்காக வியாழக்கிழமை முதலாகவே நாடு தழுவிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஈசி ஜெட் இத்தனை விமானங்களை ரத்து செய்வது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஈசி ஜெட் விமான நிறுவனமானது, பயணிகள் தங்கள் விமான கட்டணத்தை திரும்ப பெறலாம் அல்லது தாங்கள் விரும்பும் நாட்களில் அந்த பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாஃப்ட்வேர் கோளாறினால் ஏற்பட்டுள்ள இந்த தடங்கலுக்கு மன்னிப்பும் கோரியுள்ளது. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை