image courtesy: Reuters via ANI 
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இன்று 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பேருந்தின் மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து