உலக செய்திகள்

துனிசியா நாட்டில் படகு விபத்து; 80க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

துனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தினத்தந்தி

ஜெனீவா,

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர்.

அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதிக எடையால் படகு திடீரென நடுவழியில் கவிழ்ந்தது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கியவர்களில் 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்