கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஐரோப்பாவில் ஒரே வாரத்தில் 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான்..!

ஐரோப்பாவில் ஒரே வாரத்தில் 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன்,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது.ஜனவரி முதல் வாரத்தில் இந்த வைரஸ், ஐரோப்பாவில் 70 லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது. 2 வாரங்களில் 2 மடங்காக இந்த பரவல் அமைந்துள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் குளுகே, இந்த பிராந்தியத்தில் உள்ள 26 நாடுகளில் அவற்றின் மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வாரமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடுகளின் சுகாதார அமைப்புகள் நிரம்பி வழியும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இதற்கு முன் நாம் கண்ட உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஒமைக்ரான் மிகவேகமாகவும், பரவலாகவும் நகர்கிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள்ளும் முககவசம் அணிவதை நாடுகள் கட்டாயம் ஆக்க வேண்டும். தடுப்பூசிகள் போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்