உலக செய்திகள்

மொசாம்பிக் நாட்டில் 50 வெளிநாட்டினர் தலை துண்டித்து கொலை

மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

மொசாம்பிக்

மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 50 பேர்களின் தலையை வெட்டி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங்களில், வெளியேறிய நிலையில், அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பு சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து தற்போது அவர்களை கொடூரமாக கொலைசெய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

53,000 பேர்கள் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை சுமார் 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா அறியப்படுகிறது. இப்பகுதியில் இருந்து சுமார் 1,400 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தெருவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பலரது உடல்கள் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு