பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று இந்தியா தெடர்ந்து எச்சரித்த போதும், அந்நாடு அதை மறுத்து வந்தது.
இப்படி இருக்க, முதல் முறையாக பயங்கரவாதத்துக்கு துணைபோனதை அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. தெலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் இதைத் தெரிவித்துள்ளார்.
லஷ்கர் இ தெய்பா, ஜெய்ஷ் இ முகமது பேன்ற அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டது உண்மைதான். ஆனால், அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்கு காட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.