உலக செய்திகள்

மியான்மரில் இதுவரை போராட்டக்காரர்கள் 701- பேர் ராணுவத்தால் சுட்டுக்கொலை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

யாங்கூன்,

மியான்மரில், ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. இதுவரை 701-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் 3,100 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 650- பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை