உலக செய்திகள்

மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77).

நைப்பிதாவ்,

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங்சான் சூகி ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஆங்சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்களுக்கு அடுத்தடுத்து தண்டனை வழங்கப்பட்டன. இதில் இதுவரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு இன்று மியான்மர் ராணுவ கோர்ட்டில் வழங்கப்பட்டது. அதன்படி ஆங்சான் சூகிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு மொத்தம் 31 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்